ராகுல் காந்தி தான் வசிக்கும் அனைத்து விதமான பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெளிநாடு செல்வதற்கு முன்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை தான் சந்தித்ததாக விஜய் மல்லையா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதை இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறுத்துள்ளார். இவரது கருத்துக்கள் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் குற்றவாளியான விஜய் மல்லையா தப்பிச்செல்ல அருண் ஜெட்லி தான் காரணம், எனவே அவர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் எனக் கூறினார்.


இதற்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ராகுல் காந்தி தான் ராஜினமா செய்ய வேண்டும். காந்தி குடும்பத்துக்கும் மல்லையாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சியில் தான் விஜய் மல்லையாவுக்கு கடன்களை வழங்குவதற்காக வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதி அனைத்தும் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது.


ராகுல் காந்தி அவர்கள் தனது குடும்பத்துக்கும் மல்லையாவுக்கும் இடையிலான உறவு என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கோயல் கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சட்ட விதிமுறைகளை மீறி கடன் வழங்கியுள்ளது. எனவே ராகுல் காந்தி தான் வசிக்கும் அனைத்து விதமான பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறினார்.