புனித நீரான கங்கை நீர் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் உபயோகமற்றது என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கங்கையில் நீராட ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், கங்கை நதி மிக மோசமாக மாசுபாடு அடைந்துள்ளதால் அந்த நீர் குடிக்கவோ, குளிக்கவோ பயன்படுத்த முடியாது என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.


இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியதாவது:-


கங்கை நதி பாயும் வழியில் 86 இடங்களில் கண்காணிப்பு மையம் அமைத்திருந்தோம். அந்த இடங்களில் உள்ள நீரை பரிசோதனை செய்ததில் 78 இடங்களில் உள்ள நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதனால் கங்கை நதியை குடிக்க, குளிக்க பயன்படுத்த இயலாது. 86 இடங்களில் வெறும் 18 இடங்களில் மட்டும் குளிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.