Kanpur Encounter: ரவுடி கும்பலுக்கு தகவல் கொடுத்த காவல் நிலைய அதிகாரி வினய் திவாரி கைது
கான்பூர் என்கவுன்டர் (Kanpur Encounter Case) வழக்கில், சபேபூர் காவல் நிலைய பொறுப்பாளர் வினய் திவாரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக ஐ.ஜி. மோஹித் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கான்பூர்: கான்பூர் என்கவுன்டர் (Kanpur Encounter Case) வழக்கில், சபேபூர் காவல் நிலைய பொறுப்பாளர் வினய் திவாரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக ஐ.ஜி. மோஹித் அகர்வால் தெரிவித்துள்ளார். கான்பூரில் வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்தின் பின்னணியில் வினய் திவாரிக்கு பங்கு இருக்கிறது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவர் மீதான சந்தேகம் உறுதி செய்யப்பட்டால், சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும் எனவும் ஐ.ஜி. கூறினார். சபேபூர் காவல் நிலையத்தில் அவரிடம் எஸ்.டி.எஃப் (Special Task Force) விசாரணை நடத்தி வருகிறது. வினய் திவாரி ரகசிய தகவல்களை கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது சபேபூர் காவல் நிலையத்தின் பொறுப்பு புஷ்பராஜ் சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.
தூப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் கண்ட அனைத்து சாட்சிகளிடமும் எஸ்.டி.எஃப். (STF) விசாரித்து வருகிறது. வினய் திவாரி மீது சந்தேகம் வரக்காரணம், ரவுடி விகாஸ் துபேவை பிடித்த சென்ற போலீஸ் அதிகாரிகள் குழுவில் கடைசி வரிசையில் தொடர்ந்து இருந்தார், அதுமட்டுமில்லாமல் காவல்துறையினர் மீது குற்றவாளிகளால் தூப்பாக்கி சூடு நடத்திய போது, அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார். ஆரம்பத்தில் இருந்தே சந்தேகத்திற்கிடமாக அவரது செயல்பாடுகள் இருந்தது. இதனால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
READ MORE | Kanpur Encounter: ரவுடி-போலீசார் மோதல்; DSP உட்பட எட்டு உ.பி. போலீசார் பரிதாபமாக மரணம்
ரவுடி விகாஸ் துபேயின் வீட்டை போலீசார் இடித்தனர்:
கான்பூர் என்கவுன்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே (Vikas Dubey) என்பவரின் வீட்டை போலீசார் இடித்துள்ளனர். போலீஸ் படை இன்று (சனிக்கிழமை) இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இதற்கிடையில், குற்றவாளிகளைப் பிடிக்க உ.பி. காவல்துறை 100 குழுக்களை அமைத்துள்ளது. விகாஸ் துபேயைத் தேடி 10 ஆயிரம் வீரர்கள் களத்தில் உள்ளனர். இருப்பினும், விகாஸ் துபே பற்றிய எந்த துப்பும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவரை காப்பாற்றவோ அல்லது தங்குமிடம் கொடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
READ MORE | கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசும் பயிற்சியில் தோல்வியடைந்த உ.பி. போலீஸ்: VIDEO
உ.பி. போலீசார் மத்திய பிரதேசத்தின் எல்லையை அடைகிறார்கள்:
விகாஸ் துபேயைத் தேடி போலீசார் மத்தியப் பிரதேச எல்லை வரை தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களின் உள்ளூர் போலீசாரும் எச்சரிக்கையாக கொடுக்கப்பட்டு உள்ளது. கொலை, ஆயுதக் கொள்ளை ஆகிய வழக்குகளில் விகாஸ் துபே உட்பட 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.