லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தின் அரசியலில் மீண்டும் பெரிய பரபரப்புக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. அதாவது உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11 தொகுதிக்கான சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பிஎஸ்பி கட்சி தனித்து போட்டியிடும் அன்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறியதாக கூறப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று (திங்ககிழமை) பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி,தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் வரப்போகும் 11 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்லில் எப்படி செயல்படுவது என்றும், மக்களவை தேர்லில் ஏற்பட்ட தோல்வியை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாகவும், மேலும் சட்டசபை இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுவது குறித்தும் பேசப்பட்டது என தகவல்கள் கிடைத்தள்ளது. 


அதற்கு காரணம் லோக் சபா தேர்தலில் எஸ்.பி மற்றும் பி.எஸ்.பி (SP-BSP) கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் இந்த கூட்டணியால் அதிக தொகுதிகளை வெல்ல முடியவில்லை. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி (Samajwadi Party) கட்சி 5 இடங்களிலும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் (Bahujan Samaj Party) கட்சி 10 இடங்களிலும் மட்டும் வெற்றி பெற்றது. 


இதனால் கோபமடைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, யாதவர்கள் ஓட்டு போடததால் தான் தோல்வி ஏற்ப்பட்டது. மேலும் அவர்கள் நமக்கு மட்டுமில்லை, சமாஜ்வாதி கட்சிக்கும் ஓட்டு போடவில்லை. அதனால் தான் அவர்களுடன் கூட்டணி வைப்பது எந்தவித பயனும் இல்லை எனக் கூறியதாக கூறப்படுகிறது.


இதனால் உத்திரப்பிரதேச மாநிலத்தின் மெகா கூட்டணி முறிய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிஎஸ்எஸ் தலைவர் மாயாவதி, லோக் சபா தேர்தலின் தோல்வியை அடுத்து, பல மாநிலங்களின் மாநிலத் தலைவர்களின் பதவியை பறித்து பெரும் நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.