பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக துப்பு தருபவர்களுக்கு கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி 10 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


கடந்த செப் 6-ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த, புகழ் பெற்ற எழுத்தாளர், பி.லங்கேஷ். அவரது மூத்த மகள், கவுரி லங்கேஷ். பல்வேறு பத்திரிகைகளிலும், கட்டுரைகள் எழுதி வந்த அவர், கன்னட மொழியில் வெளியாகும், 'லங்கேஷ் பத்திரிகே' பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்து வந்தார்.


பெங்களூருவில் உள்ள, ராஜ ராஜேஸ்வரி நகரில், தன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டனர்.


இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை எந்த முன்னேற்றம் இல்லாத நிலையில் தற்போது இந்த கொலை தொடர்பாக துப்பு தருபவர்களுக்கு கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி 10 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார்.