2-வது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக அதிகரிப்பு
இந்த ஆண்டுக்கான(2017) நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் (ஜூலை to செப்டம்பர்) 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான(2017) நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் (ஜூலை to செப்டம்பர்) 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைக்கு பின்னர் இந்த ஆண்டுக்கான முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதம் அளவுக்கு சரிந்தது.
பின்னர் மத்திய அரசு மேற்கொண்ட பல நடவடிக்கையால் இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. முதல் காலாண்டுடன் ஒப்பிட்டால் இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 0.6% உயர்ந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி 6.3 சதவீதமாக அதிகரித்த்துள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் 9 முதல் 10 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டும். அதற்கான நடவடிக்கை அரசு மேற்கொள்ளும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.