ஜெர்மனியை சேர்ந்தவர் ஹோல்கர் எரிக் மிஸ்ச், இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர், ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். 
சோனபத்ரா மாவட்டத்தில் உள்ள ராபர்ட்ஸ்கஞ்ச் என்ற இடத்தில் ரயிலில் இருந்து இறங்கினார். அங்கு பீகாரைச் சேர்ந்த அமன்குமார் ஒருவனிடம் ஜெர்மன் சுற்றுலா பயணி கேட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது அந்த அமன்குமார் என்பவன் 'உங்களை வரவேற்கிறேன்' என்று ஜெர்மன் சுற்றுலா பயணியிடம் கூறினான். ஆனால் ஜெர்மன்காரர் பதிலுக்கு வணக்கம் சொல்ல வில்லை என்பதால் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார் அமன்குமார். 


இந்நிலையில் ஜெர்மன் சுற்றுலாப் பயணி அமன்குமார் மீது புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகரை அடுத்து, அமன்குமார் கைது செய்யப்பட்டார்.