சீனாவுக்கான ஒரு கடுமையான பதிலடியாக, தைவானின் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வு (Joseph Wu) புதன்கிழமை சீனப் பணியகத்தை “Get lost” என்று கூறினார். சீன பணியகம் இந்திய ஊடகங்கள் ‘ஒன்றுபட்ட சீனா கொள்கையை’ பின்பற்றவேண்டும் என கேட்டுக்கொண்டதை அடுத்து, தைவான் வெளியுறவுத் துறை அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தைவானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு ட்வீட், "இந்தியா துடிப்பான ஊடக சக்தியும், சுதந்திரத்தை விரும்பும் மக்களையும் கொண்டுள்ள பூமியின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். ஆனால் கம்யூனிஸ்ட் நாடான சீனா அனைத்து நாடுகளின் மீதும் அடக்குமுறைகளை விதித்து அணிவகுத்துச் செல்லலாம் என நம்புவதாகத் தெரிகிறது." என்று கூறியுள்ளது.


"தைவானின் இந்திய நண்பர்களிடம் இதற்கு ஒரு பதில்தான் இருக்கும். GET LOST! JW", என்று ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த ட்வீட் JW என கையொப்பமிடப்பட்டுள்ளது – JW என்பது Joseph Wu என்ற தைவானின் (Taiwan) வெளியுறவு அமைச்சரை குறிக்கும்.


அக்டோபர் 10 ம் தேதி கொண்டாடப்படும் தைவானின் தேசிய தினத்திற்கு முன்னதாக, டெல்லியில் உள்ள சீனப் பணியகம் (Chinese Mission) இந்திய ஊடகங்களுக்கு கடிதம் எழுதி, தைவானை ஒரு "நாடு" என்று குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது.


அந்த கடிதத்தில் சீன பணியகம், "உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது என்பதை எங்கள் ஊடக நண்பர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்" மற்றும் "சீன மக்கள் குடியரசின் அரசாங்கம் முழு சீனாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே முறையான அரசாங்கமாகும்" என்று கூறியுள்ளது.


 "தைவான் சீனாவின் பிரதேசத்தின் ஒரு தவிர்க்கமுடியாத பகுதியாகும். சீனாவுடன் தூதாண்மை உறவுகளைக் கொண்ட அனைத்து நாடுகளும் ஒன்றுபட்ட சீனக் கொள்கையில் தங்கள் உறுதிப்பாட்டை உறுதியாக மதிக்க வேண்டும். இது இந்திய (India) அரசாங்கத்தின் நீண்டகால உத்தியோகபூர்வ நிலைப்பாடாகும்" என்று அது கூறியது.


ALSO READ: சீனாவில் அராஜகம்: உண்மை பேச எண்ணிய உள்ளம் விலையாகக் கொடுத்தது தன் உயிரை!!


தைவான் தேசிய நாள் குறித்து இந்தியாவின் முன்னணி தேசிய செய்தித்தாள்கள் முழு பக்க விளம்பரத்தை வெளியிட்டன. சில தொலைக்காட்சி சேனல்கள் இது குறித்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. இதற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்த கடிதம் சீன பணியகத்தால் வெளியிடப்பட்டது.


சீன (China) மிஷனின் கடிதத்தில், "இந்திய ஊடகங்கள் தைவான் குறித்த இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் படி நடக்க வேண்டும். ஒன்றுபட்ட சீன கொள்கையை மீறக்கூடாது" என்று கூறப்பட்டது. மேலும், தைவானை ஒரு "நாடு" அல்லது "சீன குடியரசு" என்றும், தைவான் அதிபர் சாய் இங்-வென்னை தைவான் அதிபர் என்றும் குறிப்பிடக்கூடாது என்றும் சீன பணியகம் கூறியுள்ளது. இது பொது மக்களுக்கு தவறான சமிக்ஞைகளை அனுப்புகிறது என்றும் அது தெரிவித்துள்ளது.


அக்டோபர் 10, 2011 சீனாவின் குயிங் வம்சத்தின் முடிவுக்கு வழிவகுத்த வுச்சாங் எழுச்சியின் தொடக்கத்தையும் சீனக் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டதையும் குறிக்கிறது. இந்த நாள் தைவானிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் இந்த நாள் கொண்டாடப்படும்.


ALSO READ: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், BRICS உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR