ஏர்போர்ட் மெட்ரோ ரயில்- இலவச வைபை
டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ ரயிலில் இன்று முதல் இலவச வைபை வசதி துவக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண்மை தலைவர் டாக்டர் மாங்கு சிங் சிவாஜி மெட்ரோ நிலைய அரங்கத்தில் இன்று இலவச வைபை வசதி துவக்கி வைத்தார். ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று முதல் வைபை வசதியை மக்கள் பயன்படுத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது முக்கிய ஐந்து மெட்ரோ ரயில் நிலையங்களில் வைபை வசதி வழங்கியுள்ளது. ராஜீவ் சௌக், காஷ்மீரே கேட், விஸ்வவித்யாலயா, சென்ட்ரல் செக்றேடரியெட் மற்றும் ஹாஜ் காஸ். இலவச வைபை வசதி முதல் 30 நிமிடங்களுக்கு அளிக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.