புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியால் தான் பெருமைப்படுவதாகவும், பாஜக தலைவர் நரேந்திர மோடி தனது உண்மையான ரூபத்தை என்றும் மறைப்பதில்லை என்றும் கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இந்திய பிரதமரை பாராட்டினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்முவில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் முதல்வர், "எனக்கு பல தலைவர்களிடம் பல விஷயங்கள் பிடித்துள்ளன. நான் கிராமத்தைச் சேர்ந்தவன், அதனால் பெருமைப்படுகிறேன். நமது பிரதமர் நரேந்திர மோடியும் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் தேநீர் விற்றுக்கொண்டிருந்தார். அதில் அவர் பெருமைப்படுகிறார். நாங்கள் அரசியல் ரீதியாக போட்டியாளர்களாக இருக்கலாம். ஆனால் அவர் தனது உண்மையான ரூபத்தை என்றும் மறைத்ததில்லை, தன் பழைய நாட்களை மறந்ததில்லை என்பதை நான் பாராட்டுகிறேன்." என்று கூறினார்.


அவர் தனக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் (Narendra Modi) இடையில் உள்ள ஒற்றுமைகளைப் பற்றி கூறினார். தன்னைப் போலவே பிரதமர் மோடியும் தான் எங்கிருந்து வந்தாரோ அதை மறக்கவில்லை என்றும், தன்னை சாய்வாலா அதாவது தேநீர்காரன் என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறார் என்றும் குலாம் நபி ஆசாத் கூறினார்.


ALSO READ: பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த சிறத்த விருது: என்ன முக்கியத்துவம்?


முன்னதாக, சில நாட்களுக்கு முன்னர் குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது குலாம் நபியுடனான (Ghulam Nabi Azad) தனது நீண்டகால தொடர்பை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டார், அவருக்கு புகழாரம் சூட்டினார்.


"குலாம் நபி ஜிக்கு பதிலாக (எதிர்க்கட்சித் தலைவராக) யார் வரப்போகிறாரோ, அவர் குலாம் நபி ஜி அளவிற்கு தன் பணியை செவ்வனே செய்ய அதிகம் முயற்சி எடுக்க வேண்டி இருக்கும். ஏனெனில், குலாம் நபி ஆசாத், தனது கட்சி பற்றி மட்டுமல்லாமல், அவை மற்றும் நாட்டைப் பற்றியும் அக்கறையுடன் இருந்தார்” என்று பிரதமர் மோடி அப்போது தெரிவித்திருந்தார்.


இதற்கிடையில், சனிக்கிழமையன்று, காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ள 23 காங்கிரஸ் தலைவர்கள், கட்சிக்கு ஒரு சிறந்த தலைமை தேவை என்ற தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர்.


காங்கிரசில் (Congress) தலைமை மற்றும் நிறுவன மாற்றங்களைக் கோரிய தலைவர்கள், பொறுப்பற்ற தலைமை காரணமாக காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருவதாக குற்றம் சாட்டினர்.


ALSO READ: PM Kisan இன் தவணை பற்றிய Big News, இவர்களுக்கு 2000 ரூபாய் கிடைக்கும்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR