பாகிஸ்தானுக்கு செல்லாத பாக்கியசாலிகளில் நானும் ஒருவன்: குலாம் நபி ஆசாத்

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.குலாம் நபி ஆசாத், தனது பதவிக்காலத்தின் கடைசி நாளான இன்று, ஆற்றிய உரையில், இந்தியாவின் இஸ்லாமியராக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என்று கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 9, 2021, 03:54 PM IST
  • காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான குலாம் நபிஆசாத் மாநிலங்களைவையில் உரையாற்றினார்.
  • மாநிலங்கள் அவையில் அவரது பதவிக்காலம் இன்றோடு நிறைவு பெறுகிறது.
  • பாகிஸ்தானில், சிறூபான்மையினருக்கு பாதுகாப்பு ஏதும் இல்லாத நிலையை பார்க்கும் போது, ஒரு இந்திய முஸ்லீமாக நான் பெருமை கொள்கிறேன் என அவர் கூறினார்.
பாகிஸ்தானுக்கு  செல்லாத பாக்கியசாலிகளில் நானும் ஒருவன்: குலாம் நபி ஆசாத் title=

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.குலாம் நபி ஆசாத், தனது பதவிக்காலத்தின் கடைசி நாளான இன்று, ஆற்றிய உரையில், இந்தியாவின் இஸ்லாமியராக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என்று கூறினார்.

காங்கிரஸ் எம்.பி குலாம் நபி ஆசாத் மற்றும் ஜம்மு காஷ்மீரை (Jammu Kashmir) சேர்ந்த வேறு 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அவர்களுக்கு இன்று, பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. 

தனது பதவிக்காலத்தின் நிறைவு நாளான இன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான குலாம் நபிஆசாத் மாநிலங்களைவையில் உரையாற்றினார். 

பாகிஸ்தானுக்கு (Pakistan) செல்லாத பாக்கியசாலியான இந்திய இஸ்லாமியர்களில் நானும் ஒருவன். பாகிஸ்தானில், சிறூபான்மையினருக்கு பாதுகாப்பு ஏதும் இல்லாத நிலையை பார்க்கும் போது, அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலைகளை நினைத்து பார்க்கும் போது, ஒரு இந்திய முஸ்லீமாக நான் பெருமை கொள்கிறேன் என அவர் கூறினார். 
பயங்கரவாதமும், தீவிரவாதமும், நாட்டில் இருந்து முழுமையாக அகற்றப்பட வேண்டும். எல்லையைக் காக்கும் வீரர்கள் நாட்டுக்காக உயிரிழப்பது  முடிவுக்கு வர வேண்டும் என கண்ணீருடன், உணர்ச்சி குலாம் நபிஆசாத் பேசினார்.

குலாம் நபி ஆசாத் விடைபெறும் போது பிரதமர் நரேந்திர மோடி கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டார். ஜம்மு-காஷ்மீரில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பயணிகள் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டபோது, ​​சுமார் 8 பேர் கொல்லப்பட்ட சமபவத்தை பற்றீ குறீப்பிட்ட அவர், அந்த நேரத்தில் குலாம் நபி அவர்களிடம்டமிருந்து தனக்கு அழைப்பு வந்தது, அந்த தொலைபேசி அழைப்பு தகவல் கொடுப்பதற்காக மட்டுமல்ல, அதை நினைத்து குலாம் நபி ஆசாத் மிகவும் வருந்தியதாக  பிரதமர் கூறினார். 

குலாம் நபி தனது உண்மையான நண்பர் என்று பிரதமர் மோடி (PM Narendra Modi) குறிப்பிட்டார். சபைக்கு அவரை போன்ற ஒரு தலைவர் தேவை என்று கூறினார்.அவரது அனுபவம், அவரது அறிவு பிராந்தியத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பெரும் பங்காற்றியுள்ளது என பிரதமர் குறிப்பிட்டார். ஒரு நண்பராக, நிகழ்வுகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் குலாம் நபி அவர்களை நான் மதிக்கிறேன் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

ALSO READ | பாகிஸ்தான் காலிஸ்தான் தொடர்புள்ள 1178 டுவிட்டர் கணக்குகளை முடக்கவும்: மத்திய அரசு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News