கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி மாநில ஆளுநரிடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவா மாநில முதல்வர் மனோகர் பரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக அரசு சம்மந்தப்பட்ட வேலைகளை அவரால் சரிவர கவனிக்க இயலவில்லை என தெரிவித்து அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார். எனினும் மனோகர் பரிக்கர் தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார் என பாஜக தரப்பு தெரிவித்து வருகின்றது.



இந்நிலையில் இன்று கோவாவில் ஆட்சியமைக்க உரிமை கோரி மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் காங்கிரஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் சேர்ந்து மனு அளித்துள்ளனர். மேலும், பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் தற்போது தங்களுக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


காங்கிரஸ் கட்சியினை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கும் பட்சத்தில் கோவாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இதனை தடுக்கும் விதமாக பா.ஜ.க கூட்டணி கட்சிகளை தக்க வைக்கும் முயற்சியிலும், வேறு ஒருவரை முதல்வராக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றது.


40 தொகுதிகள் கொண்ட கோவா மாநிலத்தில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 14 தொகுதிகளில் பா.ஜ.கவும் வெற்றி பெற்றது. தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பா.ஜ.க கோவா-வில் ஆட்சி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.