மும்பை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (Coronavirus) அதிகரித்து வருவதால், தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கு பட்ஜெட் விலையில் பல்வேறு உயர்தர ஹோட்டல்களில்  "தனிமைப்படுத்தல் தொகுப்புகள்' (Quarantine Packages) அறிமுகப்படுத்தப்படுவதாக கோ ஏர் (GoAir) இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனிமைப்படுத்தல் காலத்தில் யாராவது தங்க விரும்பினால், ஒரு நபர் ஒரு இரவு தனிமைப்படித்துக்கொள்ள ஆரம்ப விலை 1,400 ரூபாய் ஆகும். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நாட்டில் ஒரு விமான நிறுவனம் மேற்கொண்ட முதல் தொகுப்பு (Budget carrier GoAir) இதுவாகும். 


ALSO READ | எச்சரிக்கை!! 24 மணி நேரத்திற்குள் ஒரு மனிதனைக் கொல்லும் புதிய தொற்றுநோய் புபோனிக் பிளேக்!


கோ ஏர் நிறுவனத்தின், இந்த விடுமுறை தொகுப்பு (GoAir Holiday Package) வலைத்தளத்தின் மூலம் தனிமைப்படுத்தல் தொகுப்பு பெறலாம் என்று விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் நிறுவனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோட்டல்களில் பயணிகள் எளிதில் தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து அல்லது இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு வரும் பயணிகளுக்கு இந்த தொகுப்புகள் கிடைக்கும் எனவும் தனது அறிக்கையில் கோ ஏர் கூறியுள்ளது. 


கொச்சி (Kochi), கண்ணூர், பெங்களூரு (Bengaluru), டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ள பட்ஜெட் ஹோட்டல் அல்லது உயர்நிலை ஹோட்டல் உள்ளிட்ட பல ஹோட்டல்களை பயணிகள் தேர்வு செய்யலாம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 


ALSO READ | 550 தனிமைப்படுத்தல் படுக்கைகளுடன் உருமாற்றப்பட்ட சென்னை வர்த்தக வளாகம்...


ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்ட தொகுப்புகள் என்பது ஒரு நபருக்கு ஒரு இரவுக்கு ரூ .1,400 (சுமார் 19 அமெரிக்க டாலர்) மற்றும் அவர்களின் விமான நிலையத்தை பொறுத்து ஒரு நபருக்கு ஒரு இரவுக்கு ரூ .5,900 (சுமார் USD79) வரைக்கூட செல்லலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.