குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்ட மேல்முறையீட்டு ஐகோர்ட் இன்று  தீர்ப்பு வழங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சிறப்பு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 பேருக்கு, தண்டனை குறைப்பு செய்துள்ள ஐகோர்ட், அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியுள்ளது. 


கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அயோத்தியில் இருந்து வந்த சபர்மதி விரைவு ரயிலின் எஸ்.6 பெட்டி மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த விபத்தில் 59 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த ரயில் எரிப்பு சம்பவத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரமாகி வெடித்தது. 


இந்நிலையில் இன்று இவ்வழக்கில் குஜராத் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பில், 11 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 20 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 


கோத்ரா ரயில் நிலையத்தில் சதாப்தி ரயில் எரிக்கப்பட்ட போது அதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குஜராத் மாநில அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். மாநில அரசு சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறியதே இச்சம்பவம் நடக்க முக்கிய காரணம் என தெரிவித்துள்ளது.