புதுடெல்லி: நாட்டிலும் உலகிலும் பல முறை நடக்கும் பல சம்பவங்கள் நம்மை, நம் கவனத்தை வெகுவாக ஈர்க்கின்றன. சில சம்பவங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றன. சில அதிசயிக்க வைக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைப் பற்றிதான நாம் இன்று பார்க்கவுள்ளோம். வானத்திலிருந்து தங்க மழை பெய்வதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அப்படி நடந்துள்ளது. ஆம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மையில், குஜராத்தில் சூரத்தில் வானிலிருந்து தங்கம் விழுந்த சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது.


சில நாட்களுக்கு முன்பு, சூரத் (Surat) விமான நிலையத்திற்கு அருகிலுள்ள டம்மஸ் கிராமத்தில் வானத்திலிருந்து தங்க மழை பெய்தது. இந்த கிராமத்தில், தங்கம் சிறிய மற்றும் பெரிய துண்டுகளாக சாலைகளில் விழுந்திருந்ததைக் காண முடிந்தது. பெரிய தங்கத்தின் அளவு செங்கலை ஒத்த அளவிலும், சிறிய தங்கத் துண்டுகளின் அளவு ஒரு பிஸ்கெட்டைப் போலவும் இருந்தது.


ALSO READ: நாக பஞ்சமி Special: பாம்புகள் வீட்டிற்குள் விளையாடும் ஒரு வினோத கிராமம்!!


சிலருக்கு தங்க செங்கல் கிடைத்தது


வானத்திலிருந்து தங்கம் விழுந்திருப்பது பற்றி கிராம மக்கள் அறிந்ததும், அனைவரும் தங்கத்தைத் தேடி வெளியே சென்றனர். சிலருக்கு தங்க செங்கற்கள் கிடைத்தன, சிலருக்கு சிறிய தங்கத் துண்டுகள் கிடைத்தன என்று கூறப்படுகிறது.


இதன் உண்மை என்னவாக இருக்கும் என்று விசாரிக்கப்பட்ட போது, சில ஊகங்கள் வெளி வந்துள்ளன. வெளிநாட்டிலிருந்து தங்கத்தை கடத்தி வந்த ஒரு நபர் பிடிபடும் அபாயத்தில், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, பயத்தில் அதிக அளவிலான தங்கத் துண்டுகளை எறிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சாலையில் அதிக அளவில் தங்கத் துண்டுகளைப் பார்த்த மக்கள், அவை வானிலிருந்து மழையாகப் பொழிந்ததாக நம்பி இருக்கலாம் என தெரிகிறது. எனினும், தங்கம் எங்கிருந்து வந்தது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.


தங்கம் கிடைத்த மகிழ்ச்சியில் மக்கள் மூழ்கியிருந்ததால் எதையும் சிந்திக்கவோ புரிந்துகொள்ளவோ ​​அவர்கள் முயற்சி எடுக்கவில்லை.


மக்கள் தங்கத்தைத் தேடி புறப்பட்டனர்


வானத்தில் இருந்து வந்த தங்க மழை பற்றிய செய்தி கிடைத்தவுடன் கிராம மக்கள் தங்கத்தைத் தேடி புதர்களை நோக்கி செல்லத் துவங்கினார்கள். செய்தி பரவிய பின்னர், கிராம மக்கள் மற்றும் அருகிலுள்ள நகர மக்களும் அங்கு கூடினர். மாலை ஆனவுடன் இருள் சூழ்ந்ததால், மக்கள் இரவு முழுவதும் ஒளிரும் விளக்குகளுடன் தங்கத்தைத் தேடிக்கொண்டிருந்தனர். கிராமவாசிகள் பலருக்கு அன்று அதிர்ஷ்டம் அடித்தது. சிலர் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியிருந்தது. தங்கம் கிடைத்தவர்கள் அமைதியாக அங்கிருந்து சென்றார்கள். கிடைக்காதாவ்ர்கள் தங்கத்திற்கான தேடலைத் தொடர்ந்தார்கள். 


ALSO READ: இப்படியும் சில மனிதர்கள்: பறவைக்காக இருளைத் தழுவிக் கொண்ட அற்புத கிராமம்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR