Gold Rates Today: இன்று தங்கம் வாங்கலாமா? உங்கள் ஊரில் தங்கம் என்ன விலை?
மார்ச் மாதத்தின் பெரும்பகுதியில் தங்கத்தின் விலை குறைவாகவே இருந்தது. எனினும், தங்கத்தின் விலை இப்போது, ஏப்ரல் மாத துவக்கம் முதலே மெதுவாக உயரத் தொடங்கியுள்ளது.
Gold Rate Today: செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) தங்கத்தின் விலை 100 கிராமுக்கு ரூ .2,900 அதிகரித்துள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை நேற்றை விட ரூ .290 உயர்ந்துள்ளது. தேசிய அளவில், 22 காரட் தங்கத்தின் 10 கிராம் விலை இன்று ரூ .44,200 ஆகவும், 10 கிராமுக்கு 24 காரட் தங்கத்தின் விலை ரூ .45,200 ஆகவும் உள்ளது.
மார்ச் மாதத்தின் பெரும்பகுதியில் தங்கத்தின் விலை (Gold Price) குறைவாகவே இருந்தது. எனினும், தங்கத்தின் விலை இப்போது, ஏப்ரல் மாத துவக்கம் முதலே மெதுவாக உயரத் தொடங்கியுள்ளது.
அந்தந்த மாநில அரசுகள் விதிக்கும் பல்வேறு வகையான வரிகளின் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தங்கத்தின் விலைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, லக்னோ ஆகிய முக்கிய நகரங்களில் 22 காரட் தங்கத்தின் விலை விவரத்தை இங்கே காணலாம்:
டெல்லியில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை ரூ .44,410 ஆக உள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை மும்பையில் ரூ .44,200 ஆகவும் சென்னையில் ரூ .42,580 ஆகவும், பெங்களூரில் ரூ .42,260 ஆகவும் உள்ளது. கொல்கத்தாவில் 22 காரட் தங்கத்தின் விலை ரூ .44,620 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ .42,260 ஆகவும் உள்ளது. உத்தரபிரதேசத்தின் லக்னோவில் 22 காரட் தங்கத்தின் விலை ரூ .44,410 ஆக உள்ளது.
டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, லக்னோ ஆகிய முக்கிய நகரங்களில் 24 காரட் தங்கத்தின் (Gold) விலை விவரத்தை இங்கே காணலாம்:
டெல்லி - ரூ .48,450
மும்பை - ரூ .45,200.
சென்னை - 46,460.
பெங்களூரு - ரூ .46,100.
கொல்கத்தா - ரூ .47,310
ஹைதராபாத் - ரூ .46,100
லக்னோ - ரூ 48,450.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள விலை விவரங்களில் சரக்கு மற்றும் சேவை வரி (GST), TCS மற்றும் பிற வரி வகைகள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செய்கூலி, சேதாரம் ஆகியவற்றைப் பொறுத்து வெவ்வேறு நகரங்களில் உள்ள ஷோரூம்களில் தங்கத்தின் விலை வேறுபடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR