தங்கம் பாயும் நதி; மீன் பிடிப்பது போல் தங்கம் பிடிக்கும் ஜார்கண்ட் மக்கள்
ஸ்வர்ணரேகா நதி: நாட்டில் 400 க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய ஆறுகள் ஓடுகின்றன. ஆனால், தண்ணீருடன் தங்கம் பாயும் நதி நம் நாட்டில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
ஸ்வர்ணரேகா நதி: நாட்டில் பல ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகளுக்கு தனி சிறப்பு உண்டு. நாட்டில் 400 க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய ஆறுகள் ஓடுகின்றன. ஆனால், தண்ணீருடன் தங்கம் பாயும் நதி நம் நாட்டில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? உள்ளூர் மக்கள் தினமும் ஆற்று நீரை வடிகட்டி தங்கத்தைப் பிரித்தெடுத்து விற்று சம்பாதிக்கிறார்கள்.
தண்ணீருடன் தங்கம் பாயும் இந்த நதியின் பெயர் ஸ்வர்ண ரேகா நதி. இந்த நதியின் பெயரை போலவே, அதில் தண்ணீருடம் தங்கமும் கிடைக்கிறது. இந்த நதி ஜார்க்கண்டில் பாய்கிறது. இங்கு வசிக்கும் உள்ளூர் மக்களின் வருமானம் இந்த ஆறுதான். இங்குள்ள மக்கள் தினமும் ஆற்றங்கரைக்கு சென்று தண்ணீரை வடிகட்டி தங்கம் சேகரிக்கின்றனர். ஜார்க்கண்டின் தாமர், சரண்டா போன்ற பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக ஆற்றில் இருந்து தங்கத்தை வடிகட்டும் பணியை மக்கள் செய்து வருகின்றனர்.
ஸ்வர்ண ரேகா நதியின் தோற்றம் ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 16 கி.மீ. இந்த ஆறு ஜார்கண்டில் தொடங்கி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பாய்கிறது. இந்த நதியின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து பாயும் இந்த நதி வேறு எந்த நதியிலும் கலக்காமல், நேரடியாக வங்காள விரிகுடாவில் செல்கிறது.
இந்த ஆற்றில் தங்கம் எப்படி வருகிறது என்பதை பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் விஞ்ஞானிகளால் அறிய முடியவில்லை. அதாவது, இந்த ஆற்றின் தங்கம் விஞ்ஞானிகளுக்கு இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்த நதி பாறைகள் வழியாக பாயும் போது, அதில் இருக்கு தங்கத் துகள்கள் அதில் வருவதாகவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். எனினும், இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இது தவிர மற்றொரு நதியிலும் தங்கத் துகள்கள் காணப்படுகின்றன. இந்த ஸ்வர்ண ரேகா நதியின் கிளை நதியாகும். இந்த நதியின் பெயர் 'கர்காரி' ஆறு. கர்காரி நதியைப் பற்றி மக்கள் கூறுகையில், ஸ்வர்ண ரேகா நதியிலிருந்து இந்த நதியில் சில தங்கத் துகள்கள் பாய்கின்றன என்கிண்றனர். ஸ்வர்ண ரேகா நதியின் மொத்த நீளம் 474 கி.மீ.
எனினும் இந்த ஆற்றில் இருந்து தங்கம் எடுக்கும் பணி அவ்வளவு எளிதானது அல்ல. இங்கு மக்கள் தங்கம் சேகரிக்க நாள் முழுவதும் உழைக்க வேண்டியுள்ளது. இங்கு ஒரு நபர் ஒரு மாதத்தில் 70 முதல் 80 தங்கத் துகள்களை சேகரிக்க முடியும். அதாவது, நாள் முழுவதும் வேலை செய்த பிறகு, பொதுவாக ஒரு நபர் ஒன்று அல்லது இரண்டு தங்கத் துகள்கள் மட்டுமே கிடைக்கும். ஒரு தங்க துகள் விற்பனை மூலம் 80 முதல் 100 ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஒரு மாதத்தில் 5 முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே மக்கள் சம்பாதிக்க முடிகிறது.
மேலும் படிக்க | Sunspot AR30398: பூமியை மிக மோசமாக தாக்கும் சூரிய எரிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR