புது டெல்லி: கொரோனா தடுப்பூசி (COVID19 Vaccine) வழங்குவது குறித்து ஒரு முக்கியமான தகவல் வந்துள்ளது. தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு கோவிட் 19 தடுப்பூசியான "கோவாக்சின்" நேரடியாக பாரத் பயோடெக் நிறுவனம் வழங்கி வருகிறது. இது மே 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் உயர் அதிகாரி சுசித்ரா எலா இந்த தகவலை வழங்கியுள்ளார். மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள தடுப்பூசியின் அடிப்படையில் கோவிட் 19 தடுப்பூசி வழங்கப்படுகிறது என்று பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் "பாரத் பயோடெக் 2021 மே 1 முதல் சில மாநில அரசாங்கங்களுக்கு கோவாசின் தடுப்பூசி (Covaxin Vaccine) நேரடியாக வழங்கி வருகிறது என்று ட்வீட் செய்துள்ளார். இந்திய அரசு செய்துள்ள ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த தடுப்பூசி சப்ளை செய்யப்படுகிறது. பிற மாநிலங்களிலிருந்தும் நேரடி சப்ளை கோரிக்கை வந்துள்ளன. மாநிலங்களுக்கு 24x7 என்ற அடிப்படையில் தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்வோம்'" என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


ALSO READ |  யாரெல்லாம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளக் கூடாது? நிபுணர்களின் அறிவுரை


எந்தெந்த மாநிலங்களுக்கு நேரடியாக கோவாக்சின் சப்ளை செய்யப்படுகிறது:
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, அசாம், சத்தீஸ்கர், குஜராத், டெல்லி, ஜம்மு & காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களுக்கு பாரத் பயோடெக் (Bharat Biotech) தடுப்பூசிகளை நேரடியாக வழங்கி வருகிறது. ஏப்ரல் 29 ஆம் தேதி, பாரத் பயோடெக் நிறுவனம் மாநிலங்களுக்கான கோகோக்ஸின் விலையை ஒரு டோஸுக்கு ரூ .400 ஆக குறைத்தது. முன்னதாக இந்த விலை ஒரு டோஸுக்கு ரூ .600 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 


உண்மையில், தடுப்பூசி விலை (Corona Vaccine Rate) குறித்து பல தரப்பில் இருந்து வந்த விமர்சனங்களுக்குப் பிறகு, பாரத் பயோடெக் நிறுவனம் விலைகளைக் குறைத்தது. பாரத் பயோடெக் மத்திய அரசுக்கு ஒரு டோஸ் ரூ .150 என்ற விகிதத்தில் கோவாக்சைனை வழங்கி வருகிறது.


மே 1 முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி பணி தொடங்கியது:
இந்தியாவில் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி மே 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி (Corona Vaccine) போடப்படுகிறது. இந்தியாவில் தற்போது ஆக்ஸ்போர்டு ஈஸ்ட்ரோஜெனாவின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் ரஷ்யாவின் புளூட்டோனிக் ஆகிய மூன்று தடுப்பூசிகள் உள்ளன. புளூட்டோனிக் இறக்குமதி மே 1 முதல் தொடங்கப்பட்டு உள்ளது. கோவிஷீல்ட் இந்தியாவில் புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.


கொரோனா தடுப்பூசியின் முதல் கட்டத்தில், சர்க்கரை, பிபி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 60 வயது முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதே நேரத்தில், இரண்டாம் கட்டத்தில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கியது.


ALSO READ |  தடுப்பூசி செலுத்திக்கப் போறீங்களா? இதையெல்லாம் மறக்காதீங்க: டாக்டரின் வைரல் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR