புதுடெல்லி: மின்சார வாகன பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. தொழில்நுட்பம் மற்றும் பசுமை எரிபொருளின் விரைவான முன்னேற்றம் மின்சார வாகனங்களின் விலையை குறைக்கும் என்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல் கொண்டு இயங்கும் வாகனங்களுக்கு இணையாக மின்சார வாகனங்களின் விலையும் இருக்கும் எனவும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2022-23ஆம் ஆண்டுக்கான சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கான மானியங்களுக்கான கோரிக்கைகள் குறித்து மக்களவையில் பதிலளித்த அமைச்சர் நிதின் கட்கரி, குறைவான செலவு கொண்ட உள்நாட்டு எரிபொருளுக்கு மாற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, இந்த எரிபொருள் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், மாசு அளவைக் குறைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம் மாசுபாட்டால் மிகவும் அதிகப்படியாக பாதிக்கப்படுள்ள டெல்லியின் ஒட்டுமொத்த நிலைமையும் மேம்படும் என்றும் அவர் கூறினார். 


புதுதில்லி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, டாக்கா (வங்காளதேசம்), N'Djamena (சாட்), துஷான்பே (தஜிகிஸ்தான்) மற்றும் மஸ்கட் (ஓமன்) ஆகிய நகரங்கள் உள்ளன.


2021 உலக காற்று தர அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 6,475 நகரங்களில் நடத்தப்பட்ட மாசு தரவுகளின் ஆய்வில், 2021 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்த காற்றின் தரத்தை ஒரு நாடு கூட பூர்த்தி செய்யவில்லை என்பதையே இந்த தரவுகள் காட்டுகின்றன. 


மேலும் படிக்க | ஹரியானா சட்டப் பேரவையில் மதமாற்றத்துக்கு எதிரான மசோதா நிறைவேறியது 


போக்குவரத்துக்கு ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தை பின்பற்றுமாறு எம்.பி.க்களை வலியுறுத்திய நிதின் கட்கரி, அந்தந்த மாவட்டங்களில் கழிவுநீரை பச்சை ஹைட்ரஜனாக மாற்றுவதற்கு முன்முயற்சி எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஹைட்ரஜன் விரைவில் மலிவான எரிபொருள் மாற்றாக இருக்கும் என்றார் அவர்.


"அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குள், மின்சார ஸ்கூட்டர், கார், ஆட்டோரிக்ஷா ஆகியவற்றின் விலை பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர், கார், ஆட்டோரிக்ஷாவுக்கு சமமாக இருக்கும் என்று என்னால் சொல்ல முடியும். லித்தியம்-அயன் பேட்டரிகளின் விலை குறைகிறது. ஜின்க்-இரும்பு, அலுமினியம்-அயான், சோடியம்-அயான் பேட்டரிகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். பெட்ரோல் வாகனங்களுக்கு நீங்கள் ரூ. 100 செலவழிக்கிறீர்கள் என்றால், மின்சார வாகனங்களுக்கு ரூ.10 செலவழிக்க வெண்டி வரும்” என்று கட்கரி கூறினார்.


மேலும் படிக்க | உலகில் காற்று மாசு அதிகம் கொண்ட தலைநகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் தில்லி..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR