7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி... 2 ஆண்டுகள் கூடுதல் விடுப்பு கிடைக்கும்!!
7th Pay Commission: அகில இந்திய சேவையில் (ஏஐஎஸ்) தகுதியான உறுப்பினர்களுக்கான விடுமுறை தொடர்பான விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
7வது சம்பள கமிஷன் சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. மத்திய அரசு, மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, சில ஊழியர்களுக்கு விடுமுறை தொடர்பான விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இதன்படி, ஊழியர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம் (Paid Leave).
அகில இந்திய சேவையில் (ஏஐஎஸ்) தகுதியான உறுப்பினர்களுக்கான விடுமுறை தொடர்பான விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன் கீழ், இப்போது இந்த ஊழியர்கள் தங்கள் பணி காலத்தில் இரண்டு ஆண்டுகள் ஊதியத்துடன் விடுப்பு எடுக்கலாம். இந்த விடுப்பு இரண்டு குழந்தைகளின் பராமரிப்பிற்காக அதிகபட்சம் 2 ஆண்டுகளுக்கு அரசால் வழங்கப்படும்.
பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) சமீபத்தில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜூலை 28 அன்று வெளியிடப்பட்டது. இதன் கீழ், அகில இந்திய சேவை குழந்தைகள் விடுப்பு விதி 1995ல், மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. AIS ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் படி ஊதியம் வழங்கப்படுகிறது.
2 குழந்தைகளை கவனித்துக்கொள்ள 730 நாட்கள் விடுப்பு
அகில இந்திய சேவைகளின் (AIS) ஒரு பெண் அல்லது ஆண் உறுப்பினருக்கு இரண்டு மூத்த குழந்தைகளின் பராமரிப்புக்காக முழு சேவை காலத்தின் போது 730 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைவதற்கு முன்பே இந்த விடுப்பு வழங்கப்படலாம். பெற்றோர் பொறுப்பு, கல்வி, நோய்வாய்படுதல் மற்றும் இதுபோன்ற குழந்தை பராமரிப்பு பணிகளுக்காக இந்த விடுப்பு வழங்கப்படும்.
விடுப்பின் போது எவ்வளவு பணம் கிடைக்கும்
குழந்தை பராமரிப்பு விடுப்பின் கீழ், முழு சேவையின் போது முதல் 365 நாட்கள் விடுமுறைக்கு உறுப்பினருக்கு 100% சம்பளம் வழங்கப்படும். மறுபுறம், இரண்டாவது 365 நாட்கள் விடுமுறையில் சம்பளத்தில் 80 சதவீதம் வழங்கப்படும்.
மேலும் படிக்க | 7th Pay Commission குறித்து அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்.. உடனே தெரிஞ்சுக்கோங்க
காலண்டர் ஆண்டில் மூன்று விடுமுறைகள் மட்டுமே
ஒரு காலண்டர் ஆண்டில் மூன்று விடுமுறைகளுக்கு மேல் அரசாங்கத்தால் வழங்கப்படுவதில்லை. மறுபுறம், ஒற்றைப் பெண்களின் விஷயத்தில், காலண்டர் ஆண்டில் 6 முறை விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. குழந்தைகள் பராமரிப்பு விடுப்பின் கீழ் ஒரே நேர்த்தில் ஐந்து நாட்களுக்கு குறையாத விடுப்பு அளிக்கப்படுகின்றது.
விடுமுறைக்கு தனி கணக்கு
குழந்தைகள் விடுப்புக் கணக்கு மற்ற விடுப்புகளுடன் இணைக்கப்படாது என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இது உறுப்பினர்களுக்கு தனித்தனியாக வழங்கப்படும். குழந்தைகள் விடுப்புப் பராமரிப்பின் பலன்கள் ப்ரொபேஷன் காலத்தின் போது ஊழியர்களுக்கு வழங்கப்படாது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு நல்ல செய்திகள்
மத்திய அரசு விரைவில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை அதிகரிக்கவுள்ளது. இதனுடன் ஊழியர்களுக்கான ஃபிட்மெண்ட் ஃபாக்டரையும் அரசு அதிகரிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மோடி அரசு இப்போது விரைவில் நல்ல செய்தியை வழங்க உள்ளது. பண்டிகை காலம் துவங்கவுள்ள நிலையில், இந்த இரட்டை அதிகரிப்புகள் நடந்தால், அது அரசு ஊழியர்களுக்கு அளிக்கும் மிகப்பெரிய பரிசாக கருதப்படும்.
அகவிலைப்படியில் ஏற்றம்
அரசாங்கம் அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரிக்கும். இது மொத்த சம்பளத்தில் பெரும் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். ஊழியர்கள் தற்போது 42 சதவிகித அகவிலைபப்டியை பெற்று வருகிறார்கள்.
மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் 2 பெரிய குட் நியூஸ்... டிஏ உடன் இதுவும் அதிகரிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ