புதுடெல்லி: நவராத்திரி கொண்டாட்டங்கள் களை கட்டியிருக்கும் இந்த பண்டிகை காலத்தில், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பெரிய போனஸை மோடி அரசு (Modi Government) அறிவித்துள்ளது. இதற்கு ரூ .3,737 கோடி செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை 2019-2020 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸை (PLB) செலுத்த ஒப்புதல் அளித்தது. ரயில்வே, தபால் துறை, பாதுகாப்புத் துறை, EPFO, ESIC முதலான நிறுவனங்களின் சுமார் 16.97 நான்-கெஸடெட் பணியாளர்களுக்கு இந்த போனஸ் (Bonus) வழங்கப்படும். இதற்கான மொத்த நிதித் தேவை ரூ .2,791 கோடியாக இருக்கும்.


மறுபுறம், Non-PLB அல்லது ad-hoc போனஸ் நான்-கெஸடட் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் 13.70 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். 946 கோடி ரூபாய் அதற்கான நிதி உட்குறிப்பாக இருக்கும்.


வழக்கமாக, நவராத்திரிக்கு முன்னரே, முந்தைய ஆண்டில் அவர்களின் செயல்திறனுக்காக நான்-கெஸடட் ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்கப்படுகிறது. தற்போது இந்த ஆண்டு இந்த போன்ஸ் உடனடியாக வழக்கப்பட வெண்டும் என அரசு கூறியுள்ளது.


போனஸ் அறிவிப்பால் மொத்தம் 30.67 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். இதற்கான நிதித் தேவை ரூ .3,737 கோடியாக இருக்கும்.


ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு DA hike-கான அதிக வாய்ப்புகள், விரைவில் அறிவிப்பு


இந்த மாத தொடக்கத்தில், நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன்  (Nirmala Sitaraman) சமீபத்தில் பல திட்டங்களை அறிவித்தார்.


LTC பண வவுச்சர் திட்டம்` மற்றும் `சிறப்பு விழா அட்வான்ஸ் திட்டம்’ ஆகியவற்றை மத்திய அரசு தொடங்கும் என்று நிதியமைச்சர் கூறினார். அனைத்து கெஸடட் மற்றும் நான்-கெஸடட் அதிகாரிகளுக்குமான ரூ .10,000 சிறப்பு திருவிழா அட்வான்சை முன்கூட்டியே நிதியமைச்சர் அறிவித்தார். இது ஒரு முறை மட்டுமே இருக்கும் என்று அவர் விளக்கினார்.


மத்திய அரசு ஊழியர்களுக்கான LTC பண வவுச்சர் திட்டத்தின் மதிப்பீடு ரூ .5,675 கோடியாகும். பி.எஸ்.பி. மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இது ரூ .1,900 கோடியாக இருக்கும். LTC டிக்கெட்டுகளுக்கான வரி சலுகைகள் மாநில அரசாங்க ஊழியர்களுக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கும் கிடைக்கும். அவர்கள் இந்த வசதியை தேர்ந்தெடுத்தால், இந்த ஊழியர்களும் இதனால் நன்மை அடையலாம். 


ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான DA அறிவிப்பு எப்போது?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR