புதுடெல்லி: வீட்டுக் கடன் அல்லது தனிநபர் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரண செய்தி வந்துள்ளது. தற்போதுள்ள விகிதங்களில் எந்த மாற்றமும் செய்ய போவதில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) முடிவு செய்துள்ளது. அதாவது, உங்கள் கடனில் வட்டி விகிதங்கள் தற்போது அதிகரிக்காது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் இதை அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரெப்போ விகிதம் 4 சதவீதமாக இருக்கும்
முக்கிய வட்டி வீத ரெப்போ வீதம் (Repo Rate) 4 சதவீதமாக நிர்ணயிக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஷிகாந்த தாஸ் (Shaktikanta Das) வெள்ளிக்கிழமை அறிவித்தார். ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் போது, ​​நாட்டின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் கணிசமாக முன்னேறியுள்ளன என்றும் பணவீக்க விகிதம் 6 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் தாஸ் கூறினார்.


ALSO READ | SBI வாடிக்கையாளர்களே.. இனி இந்த சேவைக்கு கட்டணம் இல்லை!


இந்திய ரிசர்வ் வங்கி கடைசியாக அதன் கொள்கை விகிதத்தை 2020 மே 22 அன்று திருத்தியது, இதில் வட்டி விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் மத்திய வங்கி கொள்கை விகிதங்களை 115 அடிப்படை புள்ளிகளால் குறைத்துள்ளது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR