75th Independence Day: இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோதி கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய மாநிலங்களின் தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் கொடி ஏற்றி நாட்டின் 75 வது சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றி கொண்டாடினார்கள். அதேபோல, கூகுள் நிறுவனம், இந்தியாவின் பல்வேறு பாரம்பரிய நடன வடிவங்களை விளக்கும் சிறப்பு டூடுலுடன் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி கெளரவித்தது.


பரதநாட்டியம், பாங்க்ரா, சாவ் நடனம் என, கூகுள் டூடுல் (Google Doodle) இந்தியாவின் பல நூற்றாண்டுகளாக தொடரும் பாரம்பரியம் தொடர்பான டூடுலை வெளியிட்டு நாட்டின் பன்முக கலாச்சார உணர்வுக்கு மரியாதை செய்தது. 



பல தசாப்த காலங்களாக தொடர்ந்த போராட்டம் மற்றும் அளப்பரிய தியாகங்களுக்குப் பிறகு இந்தியா, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் நாளன்று இந்தியா சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.


"டூடுல் கலைப்படைப்பு இந்த மாறுபட்ட நடன வடிவங்களை விளக்குகிறது. இடதுபுறத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பாரம்பரிய நடனம் பரதநாட்டியம். இது மிகவும் பழமையான இந்திய நடனம், தென் தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது" என்று கூகுள், அந்த டூடுலுக்கு விளக்கம் எழுதியுள்ளது.


 "வலப்புறம் இருந்து மூன்றாக சித்தரிக்கப்பட்டது, சாவ் நடனம் என்று அழைக்கப்படும் இந்திய பாரம்பரிய நடனம். நாட்டின் கிழக்கு மாநிலமான ஜார்க்கண்டில் தோன்றியது. புருலியா சாவ் மற்றும் செரைகெல்லா சாவ் பகுதிகளில் இந்த நடனம் தோன்றியது" என அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


 Also Read | விவசாயிகள் நாட்டின் பெருமையான சின்னமாக மாற வேண்டும் - பிரதமர் மோடி


கொல்கத்தாவால் சேர்ந்த கலைஞர் சயான் முகர்ஜி இந்த டூடுலை உருவாக்கியுள்ளார். "நாட்டின் பன்முகத்தன்மையைக் காட்ட பல்வேறு இந்திய நடன வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளேன். ஒருவருக்கொருவர் வித்தியாசமாக இருக்கிறார்கள். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படைத்தான் நம் அனைவரையும் வலுவாக ஒன்றிணைத்து வைத்திருக்கிறது. டூடுலில் இருந்து மக்கள் அதை புரிந்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று அவர் சொல்கிறார்.



சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர இந்தியாவுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களை அவர் நினைவு கூர்ந்தார். கொரோனா (COVID-19) வைரஸை எதிர்கொள்ள பணியாற்றும் முன்களப் பணியாளர்களையும் பிரதமர் மோடி கெளரவித்தார்.


ALSO READ | 75வது சுதந்திர தினம்- தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து


கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடியரசு தினத்தன்றும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வுகளுக்கு நிறைய பேரை அழைக்கவில்லை. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் வென்ற 32 வீரர்கள், இந்திய விளையாட்டு ஆணையத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் மட்டும் இன்றைய சுதந்திர தின நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 


நாட்டில் சுதந்திர தினம் (Independence Day) கொண்டாடப்படுவதை அடுத்து தலைநகர் டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையினர், ராணுவம், தேசிய பாதுகாப்பு படையின் ஸ்னைப்பர் பிரிவு, ஸ்வாட் கமாண்டோக்கள் உள்ளிட்ட சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


ALSO READ | Independence Day 2021: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR