பட்டமளிப்பு விழாவில் இந்தியக் கொடி! நெகிழ வைத்த இந்திய மாணவர் வீடியோ வைரல்
Patriotism And Indian Flag: வெளிநாட்டில் தேசியப் பெருமையை இதயப்பூர்வமாக வெளிப்படுத்திய மாணவரின் செயல் சமூக ஊடகங்களில் பாராட்டையும் அள்ளிக்குவிக்கிறது.
வெளிநாட்டில் பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட இந்திய மாணவர் ஒருவைன் நாட்டுப் பற்று இணையத்தில் வைரலாகிறது. அதிலும், விடுதலைத் திருநாள் கொண்டாட்டங்களின்போது, நாட்டிற்கும், தேசியக் கொடிக்கும் கிடைத்த மரியாதையைப் பற்றி இணைய உலகம் அதிகமாக பேசுகிறது. தாய் மண்ணே வணக்கம் என்ற ஏ.ஆர் ரஹ்மானின் பாடல் உலகப் பிரபலமானது போல, இந்த மாணவரின் நாட்டுப்பற்றும் அனைவராலும் விரும்பப்படுவதாகவும் இணையத்தில் பலரும் மாணவரை பாராட்டுகின்றனர்.
இந்தியக் கொடியை, வெளிநாட்டில் தனது படிப்பிற்கான அங்கீகார நிகழ்வில் ஏற்றியதன் மூலம் தேசியப் பெருமையை இதயப்பூர்வமாக வெளிப்படுத்திய மாணவரின் செயல் பல்வேறு தரப்பினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்ததுடன், சமூக ஊடகங்களில் பாராட்டையும் அள்ளிக்குவிக்கிறது.
மேலும் படிக்க | விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்! ஹர் கர் திரங்கா! தேசியக் கொடி
வெளிநாட்டில் வசிப்பது அல்லது படிப்பவர்கள், எப்போதும், தாய்நாட்டைப் பற்றி அதிகம் யோசிப்பார்கள் என்பது இயல்பானகணிப்பு. இந்த மாணவரின் செயல், வெளிநாடுகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கிறது.
வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்கள் தேசிய அடையாளத்தை பெருமையுடன் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பை பட்டமளிப்பு விழாவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய மாணவரின் செயல் வெளிப்படுத்துகிறது.
இந்த பெருமைமிகு வீடியோவை, இந்திய நிர்வாக அதிகாரி, அவனிஷ் ஷரன், X(ட்விட்டர்) இல் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோக் காட்சியில், குர்தா, வேட்டி என இந்திய பாரம்பரிய உடை அணிந்து, பட்டமளிப்பு அங்கியுடன் காணப்படும் மாணவர் பட்டமளிக்கும் மேடைக்கு வருகிறார். தனக்கு அளிக்கும் பட்டத்தை பெறுவதற்கு முன்னதாக, கைகூப்பி, 'நமஸ்தே' என, அரங்கத்தினரைப் பார்த்து கை குவிக்கிறார்.
மேலும் படிக்க | சுதந்திர தின விழா! 1,800 சிறப்பு விருந்தினர்கள்... வீடு தோறும் மூவர்ணக்கொடி.
அதன்பிறகு, தனது பாக்கெட்டிலிருந்து மூவர்ணக் கொடியை எடுத்து பார்வையாளர்களை நோக்கி விரித்துக் காட்டுகிறார். பட்டம் பெற்ற இந்தியர், கம்பீரத்துடன் மேடையை விட்டு வெளியேறும் காட்சியில், அரங்கத்தினரின் உற்சாகமான கைதட்டல்களும் மாணவரைத் தொடர்கின்றான.
இணையத்தில் வைரலாகும் வீடியோவில், "பட்டம் பெற்ற மாணவர் பெற்றது கல்விக்கான ஒரு பட்டம், ஆனால் வென்றெடுத்ததோ மில்லியன் கணக்கான இதயங்கள்" என்று எழுதப்பட்டுள்ளது. இதுவரை சமூக ஊடகங்களில் எட்டு லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளையும் 35,000 விருப்பங்களையும் பெற்றுள்ள வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
77வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு தேசிய தலைநகர் டெல்லி தயாராகி வருகிறது. சிறப்புமிக்க வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருக்கும் டெல்லி செங்கோட்டையில் இருந்து, விடுதலை தின நாளான ஆகஸ்ட் 15ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக்கொடியை ஏற்றுவார்.
செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நாடு முழுவதிலுமிருந்து "சிறப்பு விருந்தினர்களாக" சுமார் 1800 பேர் கலந்து கொள்கின்றனர். செவ்வாய்க்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, செங்கோட்டையின் உப்பரிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 14, திங்கள்கிழமை) மாலை நாட்டு மக்களிடயே வானொலி மூலம் உரையாற்றுவார். குடியரசுத் தலைவரின் உரை இரவு 7 மணி முதல் ஆகாஷ்வானியின் தேசிய ஒலிபரப்பு சேவையிலொ ஒளிபரப்பப்படும் மற்றும் அனைத்து தூர்தர்ஷன் சேனல்களிலும் இந்தியில் ஒளிபரப்பப்படும் என்று ராஷ்டிரபதி பவன் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | சுதந்திர தின விழா.... முழு வீச்சில் ஏற்பாடுகள்... இன்று குடியரசுத் தலைவர் உரை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ