வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது. வரி கணக்கு தாக்கலுக்கான தேதி நீட்டிக்கப்பட மாட்டாது எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுவரையில் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் வருமான வரி சேவை மையங்களில் தங்கள் கணக்குகளை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் ருமான வரித்துறை அலுவலகங்களிலோ அல்லது வருமான வரித்துறை இணையதளத்தின் வழியாகவோ பொதுமக்கள் தங்கள் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யலாம்.