கடைசி பக்கத்தில் முகவரி விபரங்கள் இல்லாமலும், வழக்கமான நீல நிற பாஸ்போர்ட் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகியது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2012-ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அனைத்தும் அரசு கணினித் தகவல் தரவில் சேமிக்கப்பட்டுள்ளது, எனவே சோதனையின் போது பாஸ்போர்டை ஸ்கேன் செய்கையில் எளிதாக விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும். 


எனவே குடிமக்களின் விபரங்களை பாதுகாக்கும் முயற்சியாக பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கத்தை நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 


அதேவேலையில் தற்போது நீல நிறத்தில் வழங்கப்படும் பாஸ்போர்ட்-ன் நிறத்தினை ஆரஞ்சு நிறமாக மாற்றவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. என இந்திய வெளியுறவுத்துறையின் பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு கொள்கை மற்றும் சட்ட விவகாரங்கள் துறை துணை செயலாளர் சுரேந்தர் குமார் தெரிவித்தார்.


இதனையடுத்து மத்திய அரசு பாஸ்போர்ட் நிறத்தை ஆரஞ்சு நிறமாக மாற்ற முயற்சி செய்கிறது என்ற விசயம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியது.


இந்நிலையில் முகவரி இல்லாமல் ஆரஞ்சு நிறத்தில் பாஸ்போர்ட்டு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு தற்போது வழங்கப்படுவது போல் தொடர்ந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.