உள்மாநில பெயர்வுத் திறன் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் பொருட்களை வாங்கலாம் என்ற ‘உள்மாநில பெயர்வு திறன்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த டமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.


இதன்படி இந்த திட்டம் முதல்கட்டமாக திருநெல்வேலி மற்றும் மாவட்டங்களில் செயல்படுத்தவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக இந்த முறை மற்ற மாநிலங்களில் அமலுக்கு வரும் என தெரிகிறது. குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் எந்த கடையிலும் ரேஷன் பொருட்கள் வாங்கும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. வரும் ஜூன் மாதம் முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தபட உள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கு முன்னோடியாக ஒரே மாநிலம் ஒரே ரேஷன் எனப்படும் உள்மாநில பெயர்வுத் திறன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.


இதன்படி தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எந்தக் கடையிலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தை சோதனை அடிப்படையில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டம் அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.