நாடு முழுவதும் அதிகரித்து வரும் கோவிட் -19 தொற்று பாதிப்பு மற்றும் தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, ஆகியவற்றுக்கு இடையில், மத்திய அரசு, ஒரு எச்சரிக்கையான அணுகுமுறையை எடுத்துள்ளது. மேலும் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தை நடத்த விருப்பம் காட்டவில்லை.
 
அரசு வட்டாரங்கள், தற்போது, ​​குளிர்கால அமர்வை நடத்தக்கூடாது என்ற முடிவு தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். குளிர்கால அமர்வு (Winter Session) மற்றும் பட்ஜெட் அமர்வை இணைந்து நடத்துவதா அல்லது அடுத்த ஆண்டு பட்ஜெட் அமர்வை நேரடியாக நடத்துவதா என்பதும் பரிசீலனையில் உள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்கள் இன்னும் அமர்வை நடத்துவதற்கு தயாராகவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேள்வி நேரத்திற்கு தங்கள் கேள்விகளை தயார்செய்யும் வகையில், உறுப்பினர்களுக்கு, நாடாளுமன்ற அமர்வு குறித்து, 15 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட வேண்டும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலும் படிக்க | டிசம்பர் இறுதிக்குள் விமான போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: Hardeep Puri 


கொரோனா (Corona) தொற்று எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக இந்த ஆண்டு குளிர்கால அமர்வை நடத்தக்கூடாது என்ற வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவிட் -19 பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றப்பட்ட போதிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள், மக்கள் மற்றும் பிற உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதால் எச்சரிக்கையான அணுகுமுறை தேவைப்படுகிறது.


பொதுவாக குளிர்கால அமர்வு நவம்பர் நடுப்பகுதியில் தொடங்கி டிசம்பர் நடுப்பகுதி வரை தொடர்கிறது. இருப்பினும், தேசிய தலைநகரில் கோவிட் -19 (COVID-19) பரவுவதற்கான நிலைமை காரணமாக, அமர்வை உரிய நேரத்தில் நடத்துவதில் அரசுக்கு தயக்கம் உள்ளது.


"மழைக்கால அமர்வின் போது, ​​2,000 முதல் 3,000 வரை தான் தொற்று எண்ணிக்கை இருந்தன, அதை விட அதிகமாக இல்லை.  அப்பொழுதே நாங்கள் அமர்வு நடக்கு நாட்களை குறைக்க வேண்டியிருந்தது. இப்போது, ​​இந்த எண்ணிக்கை 7,000 மற்றும் அதற்கு மேல் உள்ளது. இருப்பினும் அரசாங்கப் பணிகள் தடைபடாது, ”என்று அரசு வட்டாரம் தெரிவித்தது.


மழைக்கால அமர்வின் போது தொடக்கத்தில் கோவிட் -19  தொற்று நோய் பாதிப்பில், 30 க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.


அடுத்த நாடாளுமன்ற அமர்வு, பட்ஜெட் கூட்டத்தொடர், 2021 ஜனவரி இறுதியில் கூட்டப்படலாம் என்று அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


மேலும் படிக்க: Good News: அமெரிக்காவின் மாடர்னா COVID-19 தடுப்பூசி 94.5% தடுப்பாற்றால் கொண்டது..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR