சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை -பினராயி!
சபரிமலையில் நேற்று இரு பெண்கள் அனுமதிக்கப்பட்டதைக் கண்டித்து கேரள மாநிலத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சபரிமலையில் நேற்று இரு பெண்கள் அனுமதிக்கப்பட்டதைக் கண்டித்து கேரள மாநிலத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, பந்தளத்தில் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாஜக-வினருக்கும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இருந்து போராட்டக்காரர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் பாஜக-வை சேர்ந்த சந்திரன் உன்னிதான் என்பவர் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையே, பாஜக-வினர், இந்து அமைப்பினர் நடத்தி வரும் முழுஅடைப்பு போராட்டத்தால் மாநிலம் முழுவதிலும் பதற்றமான நிலைமை நீடிக்கிறது. கேரளா செல்லும் கர்நாடக பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கேரளா தலைநகரான திருவனந்தபுரம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. முழுஅடைப்பு போராட்டம் காரணமாக, கேரள மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கர்நாடகா, தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துக்கள் கேரளா எல்லையில் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்ப படுகின்றது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை, அதன் பேரிலேயே கனகதுர்கா(44), பிந்து(42) ஆகியோரை சபரிமலையில் அனுமதித்ததாக தெரிவித்துள்ளார்.