கொடுரம்! டான்ஸ் பாராக மாறிய அரசு பள்ளி- வீடியோ
உ.பி., மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பார்களில் நடனமாடும் பெண்களின் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டதை தனியார் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது.
பள்ளி முடிந்து மாணவர்கள் சென்றதும் காலியாக இருக்கும் பள்ளியை பாராக மற்றியுள்ளனர். இரவு நேரத்தில் உள்ளூர் ஆசாமிகள் சிலர் சேர்ந்து பள்ளியில் பார் அழகிகளை அழைத்து வந்து குத்தாட்டம் போட வைக்கின்றனர். அந்தப் பெண்களோடு சேர்ந்து அவர்களும் ஆட்டம் போடுகின்றனர்.
இந்த அட்டூழியத்தை அம்பலப்படுத்தும் வீடியோ ஒரு தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கூடத்தை பாராக மாற்றிய ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.