புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ள நிலையில், ஏர் இந்தியாவுக்கான ஏல ஆவணங்களை இரண்டு மாதங்களுக்குள், அதாவது ஜூன் 30 வரை சமர்ப்பிக்க மத்திய அரசாங்கம் இன்று [செவ்வாய்க்கிழமை] காலக்கெடுவை நீட்டித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவிட் -19 தொற்றுநோயால் விமான மற்றும் எண்ணெய் துறைகள் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளதால், ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்- BPCL) நிறுவனங்களை தனியார் மயமாக்கினால் நிலைமையை சீர்செய்யலாம் என்று நிதி அமைச்சகம் நம்புகிறது.


கடந்த மாதம், முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை (டிஐபிஏஎம் - DIPAM) பிபிசிஎல் நிறுவனத்தில் அரசாங்கத்தின் 52.98% பங்குகளை விற்றதற்காகவும், அதன் பங்குகளை வாங்குபவர்கள் ஆவணங்களை (ஈஓஐ - EoI) சமர்ப்பிக்கும் கடைசி நாள் ஜூன் 13 வரை நீட்டிக்கப்பட்டது. 


ஏர் இந்தியாவுக்கான ஏலங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டிப்பது இது இரண்டாவது முறையாகும். இது முன்னர் காலக்கெடுவை ஏப்ரல் 30 ஆம் தேதியில் இருந்து மார்ச் 17 முதல் நீட்டித்தது.


பொதுத்துறை நிறுவனங்களின் தனியார்மயமாக்கலை ஒத்திவைக்க அல்லது காலக்கெடுவை நீட்டிக்க அரசாங்கம் விரும்புகிறதா என்று கேட்கப்பட்டபோது, ​​பெயர் சொல்ல விரும்பாத நிதி அமைச்சக அதிகாரி ஒருவர், அரசாங்கம் அதை விரும்புகிறது என்றார். மேர்லும் “எந்த அவசரமும் இல்லை. அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை எங்களுக்கு நேரம் உள்ளது” என்றும் அவர் கூறினார்.