தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை (Corona Second Wave) பரவலை கட்டுப்படுத்த புதிதாக பதவி ஏற்றுக் கொண்ட திமுக அரசு முழுமையான லாக்டவுனை அமல்படுத்தியது. பின்னர் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், சிறிது சிறிதாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில்,  பல வகை  கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதைப் போல் பொது முடக்கம் காரணமாக சுமார் 50 நாட்களாக மூடப்பட்டுள்ள ஜவுளி மற்றும் நகைக்கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு (TN Government) அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கபட்டுள்ளது. முன்னதாக, இது தொடர்பாக ஆலோசனை நடத்த ஜவுளி மற்றும் தங்க நகை வியாபாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள  பாரிமுனையில் நடைபெற்றது. 


திருமணங்களை நடத்த  அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணத்திற்கு தேவையான பட்டுப்புடவைகள், தங்க நகைகள் வாங்குவதற்கு ஜவுளி மற்றும் நகை கடைகளை திறக்க  அனுமதிக்க வேண்டும் என்றும், இதனால் இந்த துறை வாழ்வாதாரமாக கொண்டுள்ள சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் எனவும் கூறப்பட்டுள்ளது. 


ALSO READ | தனியார் பள்ளிகள் 75% மட்டும் கட்டணம் வசூலிக்க வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை


மேலும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வரும் 24ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை கடைகளை திறப்பதற்கு முதலில் அனுமதி வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு வணிகர் சங்க அமைப்புகளின் தலைவர் விக்கிரமராஜா  தெரிவித்துள்ளார்.


கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நகை, ஜவுளி, உணவகங்களின் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் வரி, போன்றவற்றை குறைந்தது ஆறு மாத காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும். எனவும், மேலும் குறைந்தபட்ச மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


Also Read | தமிழகத்தின் நிதி நிலைமை சீரான பின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR