‘அரசு எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை’ தேசத்துரோக குற்றச்சாட்டில் ஜவடேகர்!
திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோர் மீது அரசு எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்!!
திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோர் மீது அரசு எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்!!
நாட்டில் கும்பல் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து விட்டதாக கூறி, பிரதமர் மோடிக்கு மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதியிருந்தனர்.
இந்நிலையில் பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா, முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் பிரபலங்களின் கடிதம், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், சிறப்பாக செயல்படும் பிரதமரை சிறுமைப்படுத்தும் வகையிலும் இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். அவர்கள் மீது வழக்குப்பதிய வேண்டுமென்றும் அவர் கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், 49 பேர் மீது வழக்குப்பதிய காவல்துறைக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி உத்தரவிட்டது.
இதன்படி முசாபர்பூர் காவல்நிலையத்தில தேசத்துரோக குற்றச்சாட்டின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ஜவடேகரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அரசு எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை என்றார்.
மும்பையின் ஆரே பகுதியில் மரங்கள் வெட்டப்படுவது குறித்த கேள்விக்கு, வளர்ச்சி நடவடிக்கையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையும் இணைந்து மேற்கொள்ளப்படும் என்று பதிலளித்தார்.