Maharashtra Assembly: மும்பை மராத்தியர்களுக்கு அரசு வேலை மற்றும் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கு வகை செய்யும் மசோதா மகாராஷ்டிரா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது. மகாராஷ்டிரா சட்டசபையில் மராத்தா இடஒதுக்கீடு மசோதாவை முதல்வர் ஷிண்டே தாக்கல் செய்யும் போது, அவருடன் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் உடனிருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று (பிப்ரவரி 20, செவ்வாய்க்கிழமை) மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மாநில சட்டசபையில் மராத்தா ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவை நிறைவேற்றும் போது, ​​மராத்தியர்களுக்கு தற்போதுள்ள ஒதுக்கீட்டிற்கு இடையூறு இல்லாமல் இந்த இடஒதுக்கீடு மசோதாவை முன்மொழிந்துள்ளோம் என்று சட்டசபையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.


இந்த மசோதா கொண்டு வரப்பட்டதன் பின்னணியில், மற்ற சமூகத்தினரின் நன்மைகள் பாதிக்கப்படாமல், மராத்தா சமூகத்தினருக்கு நிரந்தர இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றார்.


இந்த அரசை பொறுத்த வரை மற்ற சமூகத்தினரின் இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யாமல் மராத்தா சமூகத்தினருக்கு தனது அரசு இடஒதுக்கீடு அளிக்கும் என முதல்வர் ஷிண்டே கடந்த வாரம் கூறியிருந்தார். ஜார்ரேஞ்ச் பாட்டீல் தலைமையில் மராத்தா சமூகத்தினர் ஓபிசி பிரிவின் கீழ் கல்வி மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு கோரி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க - மகாராஷ்டிராவில் பற்றி எரியும் வன்முறை தீ.. யார் இந்த மனோஜ் ஜராங்கி பாட்டீல்?


முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்


இதற்கிடையில் மகாராஷ்டிராவில் அரசு வேலை மற்றும் கல்வியில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், முஸ்லிம் சமுதாயத்தினரும் இடஒதுக்கீட்டின் பலனைப் பெற வேண்டும் என்று சமாஜ்வாதி எம்எல்ஏ-க்கள் கோரிக்கை வைத்தனர்.


மாநிலத்தில் முஸ்லிம் சமூகத்தின் மக்கள் தொகை 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிபதி ராஜிந்தர் சச்சார் கமிஷன் (2006) மற்றும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி (2004) ஆகியவை முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார மற்றும் கல்வியில் பின்தங்கி இருக்கும் நிலையை புள்ளி விவரங்களுடன் நிரூபித்துள்ளன. 


சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது -அஜித் பவார்


சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஆஸ்மி கூறுகையில், 'முந்தைய அரசு மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கியபோது, ​​அன்றே முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இன்று மராத்தா சமூகத்திற்கு நீதி கிடைத்து வருவதை நாம் வரவேற்கின்றோம். அதே சமயம் முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்படுவதையும் காண்கிறோம். ​​அனைவருக்கும் நீதி சமமாக கிடைக்க வேண்டும் என மாநில அரசிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றார். இதனையடுத்து சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது என துணை முதல்வர் அஜித் பவார் உறுதியளித்தார்.


மகாராஷ்டிரா பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்


கடந்த வெள்ளிக்கிழமை, மகாராஷ்டிரா பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (எம்பிசிசி) மராத்தா சமூகத்தின் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலை குறித்த அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி சுனில் சுக்ரே தலைமையில் அமைக்கப்பட்ட இந்த எம்பிசிசி (MBCC) ஆணையம் ஒன்பது நாட்களில் சுமார் 2.5 கோடி குடும்பங்களை ஆய்வு செய்தது. கல்வி மற்றும் வேலைகளில் மராத்தியர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஆணையம் வலியுறுத்தியது.


மேலும் படிக்க - உங்களுக்கு 83 வயதாகிறது... இனி ரெஸ்ட் எடுங்க... சரத் பவாரை கிண்டல் செய்யும் அஜித் பவார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ