நமது நாட்டில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக தேவையான வாகனங்களை அரசு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. எனவே, பெரும்பாலான நேரங்களில் மக்கள் தனியார் வாகனங்களையே, அதாவது டாக்ஸி, மினி பஸ், ஆட்டோ, தனியார் பஸ் என்று பயன்படுத்துக்கின்றனர். அப்படி பயன்படுத்தும் போது சிலசமயம் சமூக விரோத செயல்களும் நடைபெறுகிறது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள். மேலும் திருட்டு, கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற செயல்கள் நடைபெறும் போது குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காலதாமதமாகுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே, பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில், அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் ஆட்டோ, டாக்சிகளில் மற்றும் பஸ்களில் அவசியமாக ஜிபிஎஸ் கருவியை பொருத்த வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. 


ஜிபிஎஸ் கருவி பொருத்துவதன் மூலம், வாகனங்கள் செல்லும் பாதையை துல்லியமாக போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினரால் கண்காணிக்க முடியும். பயணத்தின்போது விபத்தோ அல்லது வேறு அசம்பாவிதங்கள் ஏதாவது ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடியாக உதவ முடியும். மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் பிடிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.