உத்தரக்காண்ட் நீதிமன்றத்தில் பேரக்குழந்தை கேட்டு வயதான தம்பதி வழக்கு தொடர்ந்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மகனும், மருமகளும் ஓராண்டுக்குள் பேரக்குழந்தை பெற்றுத் தர வேண்டும் இல்லையென்றால் 5 கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என அந்த தம்பதி வழக்கில் தெரிவித்துள்ளது.  உத்தரக்காண்ட் மாநிலம் ஹிரித்துவாரைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் தனது மனைவியுடன் ஹரித்துவாரில் வசிக்கிறார். 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கேரளாவில் வேகமாகப் பரவும் தக்காளி காய்ச்சல்...80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு


திருமணம் செய்து வைக்கப்பட்ட மகனும், மருமகளும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். பேரக்குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தங்களிடம் இருந்த பணத்தை எல்லாம் செலவு செய்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும், ஆனால் தங்களின் ஆசை நிறைவேறவில்லை என தெரிவித்துள்ளனர். தாங்கள் பேரக் குழந்தையை பார்க்க வேண்டும் என ஆசைப்படுவதாகவும் பிரசாத் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், " என்னிடம் இருந்த பணத்தை எல்லாம் செலவு செய்து மகனை அமெரிக்காவில் படிக்க வைத்தேன். கடன் வாங்கி வீடு கட்டினேன். எங்களது மகனுக்கு 2016-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தோம். எங்களுக்கு பேரக்குழந்தையை பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. குழந்தையின் பாலினம் பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஒரு வருடத்திற்குள் எங்களுக்கு பேரக்குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லை எனில், பணக் கஷ்டத்தில் இருக்கும் எங்களுக்கு எனது மகனும், மருமகளும் ரூ.5 கோடி கொடுக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டார்!


இது தொடர்பாக பிரசாத்தின் வழக்கறிஞர் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், " இந்த வழக்கு சமூகத்தின் நிலையை பிரதிபலிக்கிறது. சமூகத்தில் நன்றாக படித்து பணியில் நல்ல இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பெற்றோர் எடுக்கின்றனர். அதனால், பிள்ளைகள் தங்களது பெற்றோரின் அடிப்படை நிதித்தேவையை கவனித்துக்கொள்வது அவசியம். எனவேதான் பெற்றோர் தங்களது மகனிடம் ரூ.5 கோடி பணம் கொடுக்கவேண்டும் அல்லது பேரக்குழந்தை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர்" என்றார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR