கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பரவி வரும் புதிய காய்ச்சலுக்கு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தக்காளி காய்ச்சல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் பாதிப்பு கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் அதிகமாக உள்ளது.
இதுவரை 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இக்காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பரிசோதிக்க பிரத்யேக மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | தக்காளி காய்ச்சல்- அறிகுறிகள், சிகிச்சை முறை என்ன? தமிழகத்தில் அச்சம் வேண்டாம்
மேலும் குழந்தைகளைப் பரிசோதிப்பதற்காக அங்கன்வாடிகளில் சிறப்புப் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு, 24 பேர் பேர் கொண்ட குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தக்காளிக் காய்ச்சல் வைரஸ் காய்ச்சலா அல்லது சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலுக்குப் பிந்தைய காய்ச்சலா என்பது உறுதியாகத் தெரியவில்லை. தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதால் இது தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது.
தக்காளிக் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தீவிர காய்ச்சல், உடலில் தடிப்புகள், தோல் எரிச்சல், கை மற்றும் கால்களின் தோல் நிற மாற்றம், கொப்புளங்கள், வாந்தி, வயிற்றுப்போக்கு, சளி, இருமல், தும்மல், சோர்வு மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு இதில் எந்த அறிகுறிகள் தோன்றினாலும் உடனடியாக மருத்துவவரை அணுக வேண்டுமென சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | தக்காளி வைரஸ்? தக்காளிக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை: ராதாகிருஷ்ணன் விளக்கம்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR