உரி தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் கடந்த 28-ம் தேதி நள்ளிரவு ஊடுருவி பயங்கரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் 40-க்கு அதிகமான பேர் கொல்லப்பட்டதாகவும், பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாக ராணுவம் அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு சர்ஜிகல் தாக்குதல் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இப்படியொரு தாக்குதல் நடத்தப்படவில்லை என்று பாகிஸ்தான் மறுத்து வருகிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் இது தொடர்பான ஆதாரங்களை வெளியிடவேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.


இதற்கிடையே, பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக இந்த தாக்குதல் நடைபெறவில்லை என்று கூறினாலும் அந்நாட்டில் உள்ள சில அதிகாரிகள் சர்ஜிகல் ஸ்டிரைக் நடைபெற்றதை ஒப்புக்கொண்டது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் மிர்பூர் சரகத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் குலாம் அக்பர் என்ற போலீஸ் அதிகாரி, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் வீரர்கள் மற்றும் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பொய் கூறிவருவது அம்பலமாகியுள்ளது.