டெல்லி செங்கோட்டை கிணற்றில் கையெறி குண்டு கண்டுபிடிப்பு
செங்கோட்டையில் உள்ள ஒரு கிணற்றில் கையெறி குண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று மாலையில் செங்கோட்டை பகுதியில் வழக்கமான சோதனை பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது இந்த கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து இதனை தொடர்ந்து கூடுதல் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கையெறி குண்டை செயலிழக்க செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. பிறகு கையெறி குண்டை விசாரணை நடத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.
இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.