ஜிஎஸ்டி மசோதா தாக்கல், அமலுக்கு வரும் என நம்புகிறேன் :ஜெட்லி
ராஜ்யசபாவில் இன்று பிற்பகல் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் பகல் 2 மணி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி மசோதா குறித்து தனியார் டிவி ஒன்றிற்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:- பொருளாதார ரீதியாக ஜிஎஸ்டி இந்தியாவை ஒருங்கிணைப்பதாகும். இது மாநில முதல்வர்கள், நிதியமைச்சர்கள் ஆகியோ ரையும் உள்ளடக்கியது. ஜிஎஸ்டி மசோதா தொடர்பாக அனைத்து மாநில நிர்வாகத்திடமும் பேசப்பட்டு விட்டது. 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஜிஎஸ்டி அமலுக்கு வரும் என நம்புகிறேன். ஜிஎஸ்டி குறித்த அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் இன்னும் ஒரு சில வாரங்களில் விளக்கமான பதில் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.