இன்று அசாமில் நடைபெற்ற 23_வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 177-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஜூலை 1-ம் தேதி நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமுல்படுத்தியது மத்திய அரசு. ஆனால் எதிர்கட்சிகள் ஜி.எஸ்.டி குறித்து விமர்சித்து வந்தனர். சில பொருட்களுக்கு வரி அதிகமாக இருப்பதாகவும், அதைக் குறைக்க வேண்டும் எனவும் பலதரப்பினர் போரட்டம்மும் நடத்தினர்.


இதனையடுத்து மத்திய அரசு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி வரி குறித்து ஆராய்ந்தனர். ஏற்கனவே கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்களில் சில பொருட்களுக்கு வரிகள் குறைத்து சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதேபோல இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 177-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கபட்டுள்ளது.


அதன் விவரங்கள் பின்வருமாறு:
> அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது.


> ஜவுளி பொருட்களுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியை 5 சதவிகிதமாக குறைப்பு.


> டிராக்டர் உதிரி பாகங்களுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைப்பு.


> திரைப்படம் தொடர்பான பொருள்களுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைப்பு.


> 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி வெறும் 50 பொருட்களுக்கு மட்டுமே வசூலிக்கப்படுவதாக கவுன்சில் கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது


பல்வேறு அமைப்பரின் கோரிக்கை ஏற்று இந்த ஜிஎஸ்டி வரி குறைக்கபட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.