ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிட்டர்ன் ஃபைலிங்கில் நிலுவைத் தொகையை சுத்தம் செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக, ஜிஎஸ்டி கவுன்சில் 2017 ஜூலை முதல் 2020 ஜனவரி வரையிலான வரிக் காலத்திற்கான நிறுவப்படாத ஃபார்ம் GSTR-3B-க்கான தாமதக் கட்டணத்தை குறைத்துள்ளது / தள்ளுபடி செய்துள்ளது. மேலும், ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதமானால் அபராதம் விதிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தெரிவித்துள்ளார். 


GST கவுன்சின் 40-வது கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் GST நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கான மற்றும் மனிதர்களுக்கு பயனளிக்கக்கூடிய சட்டக்குழுவின் பல்வேறு பரிந்துரைகள் குறித்து மாநில நிதி அமைச்சர்களுன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.


இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது.... ஜூலை மாதம் 2017 -  ஜனவரி 2020 வரை ஏராளமான GST கணக்குகள் தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன. இதில், வருமான வரியை முழுமையாக செலுத்தியிருந்தால், GST வரி தாக்கலில் தாமதம் ஏற்பட்டாலும், அதற்கு அபராதம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார். அதே சமயம், இதேக் காலக்கட்டத்தில் வரி செலுத்துவதிலும் நிலுவை இருந்து, GST கணக்கு தாக்கல் செய்யப்படாமல் இருந்தால், தாமதமாக GST செலுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.500 வரை அபராதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


READ | ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.1.6 லட்சம் வட்டியில்லா கடன்; மத்திய அரசு திட்டம்!


ரூ.5 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு தாமதமாக GST தாக்கல் செய்வதற்கான வட்டி விகிதம் 9% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஜூலை 1, 2020 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் வட்டி விகிதம் குறைக்கப்படும். கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோருக்கு உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அனைத்து அமைச்சர்களின் வேண்டுகோளின் பேரில், ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ஜூலை மாதம் பிரத்யேகமாக ஒரு கூட்டம் நடத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.