ஜிஎஸ்டி அறிமுக விழா : நேற்று நள்ளிரவில் பாராளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரியை நாளை(ஜூலை 1-ம் தேதி) முதல் அமல்படுத்தப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்காக இன்று நள்ளிரவு பாராளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலை வகிக்கிறார். பிரதமர் மோடி ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை தொடங்கி வைத்து பேசுகிறார். அதன் பிறகு நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஜிஎஸ்டி வரி குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.
விழாவில் கலந்து கொள்ளுமாறு அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.