GST நடைமுறையின் கீழ், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்டிற்காண்டு GST வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக GST நெட்வோர்க் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.


கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட GST வரி, அறிமுக தருவாயில் GST செலுத்துவோரின் எண்ணிக்கை 60 லட்சமாக இருந்தது.


ஆனால், தற்போது, வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து, ஒரு கோடியே 21 லட்சம் பேராக அதிகரித்து உள்ளது என GST நெட்வோர்கள் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.


நாளொன்றுக்கு, சுமார் 18 லட்சம் பேர் வரிக்கணக்குத் தாக்கல் செய்வதாகவும் அவர் தனது புள்ளி விவரத்தில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இதுவரை GST நடைமுறையின் கீழ் 25 கோடியே 21 லட்சம் பேர் தாக்கல் செய்த வரிக் கணக்குகளை கையாண்டிருப்பதாகவும், பிரகாஷ் குமார் தெரிவித்திருக்கிறார்.