மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக அதன் மீதான ஜி.எஸ்டியை மத்திய அரசு 12%-லிருந்து 5%-மாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெறும் ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் மின்சார வாகனங்களுக்கான பதிவுக்கட்டணமும் தள்ளுபடி செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.


சர்வதேச அளவிலான மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு இதனால் ஊக்கம் கிடைக்கும் என்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் அரசுத் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மாசு கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக கடந்தாண்டு மின்சாரம், ஹைபிரிட் இயந்தியங்களால் இயக்கப்படும் வாகனங்களுக்கு சலுகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


அதேப்போல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் மின்சார கார் உதிரிபாகங்களுக்கு வரியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதியாக குறைத்தது.


மேலும் மின்சார வாகனங்களுக்கு பதிவு கட்டணத்தையும் குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்களுக்கான பதிவை புதுப்பிக்கும்போது, அதற்கான கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யவும் வரைவு அறிக்கையை தயாரித்து இருப்பதாக கூறப்படுகிறது.