ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் 28% வரி விகிதத்தில் இருந்த, 178 பொருட்கள் உட்பட 233 பொருட்களுக்கான வரி குறைப்பு இன்று முதல் அமலாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஜூலை, 1-ம் தேதி அன்று நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. இதன்படி நான்கு வரி (5%, 12%, 18% மற்றும் 28%) என்ற விகிதங்களில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படுகிறது. 


இந்த வரி விதிப்பு முறையால், சில பொருட்களுக்கான விலை, முந்தைய வரிகளை  விட அதிகரித்தது. இதனையடுத்து கடந்த 10-ம் தேதி மத்திய நிதி அயமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் 233 பொருட்களுக்கு வரி குறைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த வரி குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலாகிறது.


 




இதில்,


> ஹோட்டல்களுக்கான, ஜிஎஸ்டி 5% குறைக்கப்பட்டுள்ளது. 


> ஹோட்டல்களில் தங்குவதற்கான கட்டணம் 5% குறைக்கப்பட்டுள்ளது. 


> 28% வரி விகிதத்தில் இருந்த ஜிஎஸ்டி-யில் 178 பொருட்களுக்கான வரி, 18% குறைக்கப்பட்டது. 


> மேலும் 50 பொருட்கள் மட்டுமே, 28% விகிதத்தில் இருக்கும்.