புதுதில்லி:  கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், GSTவசூல் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. அதுவும் அக்டோபர் மாதம் ₹ 1.30 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது 2020 அக்டோபரில் வசூலான தொகையை விட 24 சதவீதம் அதிகம் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்டோபர் 2021 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ₹ 1,30,127 கோடி எனவும்,  இதில் சிஜிஎஸ்டி ₹ 23,861 கோடி, எஸ்ஜிஎஸ்டி ₹ 30,421 கோடி, ஐஜிஎஸ்டி ₹ 67,361 கோடி ( இறக்குமதி மூலம் கிடைத்த ரூ. 32,998 கோடி உட்பட) மற்றும் செஸ்  (Cess) ₹ 8,484 கோடி (பொருட்களின் இறக்குமதியில் வசூலான ₹ 699 கோடி உட்பட) எனவும் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


2021 அக்டோபர் மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 24% அதிகமாகவும் 2019-20  ஆண்டுடன் ஒப்பிடுகையில் 36% அதிகமாகவும் உள்ளது.  அக்டோபர் மாதத்தில் ​​பொருட்களின் இறக்குமதி மீதான  வருவாய் 39% அதிகமாக இருந்தது. உள்நாட்டு பரிவர்த்தனை தொடர்பான (சேவைகளின் இறக்குமதி உட்பட) வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த ஆதாரங்களில் இருந்து கிடைத்த வருவாயை விட 19% அதிகமாகும்.



கடந்த 2017, ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இது இரண்டாவது அதிகபட்ச வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த தொடர் நடவடிக்கை காரணமாக  GSTவசூல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது


ALSO READ | உ.பி. சட்டசபை தேர்தல் போட்டியிட மாட்டேன் - அதிர்ச்சி அளித்த அகிலேஷ் யாதவ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR