குஜராத்தில் 2 பாகிஸ்தான் உளவாளிகள் கைது
குஜராத்தில் இரண்டு பாகிஸ்தான் உளவாளிகளை போலீசார் கைது செய்து உள்ளனர்.
குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் இரு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளிகளை குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களின் பெயர்கள் முகமது அலானா மற்றும் சப்யூர் சுமாரா. எல்லையில் இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையின் நகர்வை இருவரும் நோட்டமிட்டு உள்ளனர். இதுதொடர்பான ஆவண ங்கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இரு உளவாளிகளும் தங்களுக்கு கிடைத்த தகவல்களை பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு வழங்கி உள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன. இந்நிலையில் அவர்களுடைய வீட்டில் சோதனை நடத்திய போது அவர்களிடம் இருந்து பாகிஸ்தான் சிம் கார்டு மற்றும் செல்போ ன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.