குஜராத் சட்டசபைதேர்தல்: டிசம்பர் 9-ம் & 14-ம் தேதி நடைபெறும் - ஏ.கே ஜோதி
கடந்த அக்டோபர் 12-ம் தேதி குஜராத் சட்டபேரவை தேர்தல் டிசம்பர் 18-ஆம் தேதிக்குள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அன்றே 68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சலப்பிரதேச சட்டசபை தேர்தல் நவம்பர் 9-ம் தேதி ஒரே கட்டமாகவும் நடைபெறும் என்றும், பின்னர் வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குஜராத் சட்டபேரவை தேர்தல் நடைபெறும் அதிகாரபூர்வமான தேதி எப்பொழுது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், இன்று அதைக்குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே ஜோதி கூறியதாவது:-
குஜராத்தில் மொத்தம் 4.3 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு 2 கட்டமாக நடைபெறும். மொத்தம் 50,128 வாக்குசாவடிகள் அமைக்கப்படும். வாக்களர் தங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்று தெரிந்துக்கொள்ள ஒப்புகை சீட்டு வழங்கப்படும். டிசம்பர் 9-ம் தேதி மற்றும் 14-ம் தேதி என வாக்குபதிவு 2 கட்டமாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே ஜோதி கூறினார்.