தென்மேற்குப் பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் தற்போது குஜராத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் குஜராத்தில் உள்ள பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கி வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிகுந்த வேகத்தில் காற்று வீசுவதாலும் சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்குவதாலும் பள்ளம் மேடு தெரியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 


இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,,,! 


மும்பையில் பெய்த மழை தொடர்ந்து, கொங்கன் மற்றும் கோவா, அஸ்ஸாம், மேகாலயா மற்றும் திரிபுரா, மேற்கு வங்கம், சிக்கிம், ஒடிஸா ஆகிய பகுதிகளிலும் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மேலும், கடலோர பகுதிகள் மற்றும் கர்நாடகம், வடக்கு கடலோர ஆந்திரம், சௌராஷ்டிரம் மற்றும் கட்ச் பகுதிகளிலும் கிழக்கு ராஜஸ்தான், பீகார் ஆகிய பகுதிகளிலும் அதிக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.